31. தண்டியடிகள் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 31
இறைவன்: வன்மீகநாதர்
இறைவி : கமலாம்பிகை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம்
குலம் : ?
அவதாரத் தலம் : திருவாரூர்
முக்தி தலம் : திருவாரூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி - சதயம்
வரலாறு : திருவாரூரில் அவதாரம் செய்தவர். பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். இருந்தும் சிவத்தொண்டில் உறைப்பாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் திருவாரூர் குளத்தைக் கயிறு கட்டிக்கொண்டு சீர் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அது சமயம் சமணர்கள் கண் தெரியாத இவரைக் கேலி செய்தார்கள். நாயனார் இறைவனிடம் முறையிட சமணர்கள் கண் பார்வை பறிபோனது.
முகவரி : அருள்மிகு. தியாகேசர் திருக்கோயில், திருவாரூர் – 610001 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04366-242343
திரு.பாஸ்கரன், 119 புதுத்தெரு, திருவாரூர் தொலைபேசி: 04366-240718

இருப்பிட வரைபடம்


காணுங் கண்ணால் காண்பது மெய்த்தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப் போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத் தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.

- பெ.பு. 3598
பாடல் கேளுங்கள்
 காணும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க